‘உலகப் பொருளாதார நெருக்கடி வந்தால் சராசரி மாநிலத்தை விட தமிழ்நாடு அதிகம் பாதிக்கும். கடந்த ஆட்சியின் சரியாக திட்டமிடப்படாத நிதி மேலாண்மையால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு. பணமதிப்பிழப்புஇ முறையற்ற ஜி.எஸ்.டி வரிவிதிப்பு மற்றும் கொரோனா தொற்று ஆகியவையே பொருளாதார சுணக்கத்திற்கு காரணம். வளர்ச்சி பெறும் மாநிலங்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்து 11வது இடத்திற்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது’.

‘அதிக அளவிலான பணம் இலவச திட்டங்கள்இ மானியங்களுக்கு செல்கிறது; மானியங்களால் பயன்பெறுவோர் குறித்த முறையான தகவல் இல்லை. ஒன்றிய அரசின் உதய் மின்திட்டத்தை அமல்படுத்தியதால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.48இ500 கோடி இழப்பு. நிதி நிலைமையை 5 வருட ஆட்சிக்குள் சீரமைப்போம் என்ற நம்பிக்கை உள்ளது; எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் விடமாட்டோம்’.

‘கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் ஒரு இலட்சம் கோடி செலவிட்டு உள்ளது. அதிமுக அரசின் வீண் செலவால் தனிநபர் ஒருவருக்கு ரூ.50000 இழப்பு ஏற்பட்டுள்ளது. லாபகரமாக இயங்குவதற்கு கடன் வாங்கலாம்இ நஷ்டமாக இயங்குவதற்கு கடன் வாங்குவது தவறு. தமிழ்நாடு பணக்கார மாநிலம்; இந்தியாவுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் அதிகமான சொத்துக்கள் உள்ளன. கடந்த 7 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட சரிவுகள் 5 ஆண்டுகளில் சரிசெய்யப்படும்’ என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உறுதியளித்தார்.