கொவிட் தொற்றினால் நாடு மிகவும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்திடம் எந்த வேலைத்திட்டமும் இல்லை. அதனால் நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை மக்களின் உயிரை பாதுகாக்க ஒதுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இல்லாவிட்டால் நகரம் அழகாகும்போது அதனை அனுபவிக்க மக்கள் இருக்காது சவக்குழிகளே இருக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற, குடிவருவோர் குடியகல்வோர் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் வாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகைலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.