ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வருகின்ற 21ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நா 76ஆவது பொதுச்சபைக் கூட்டம் நியூயோர்க்கில் நடக்கவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்ளவே ஜனாதிபதி அமெரிக்கா செல்லவுள்ளார்.

இதேவேளை இலங்கை ஜனாதிபதியாக தெரிவான நாளிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்துகொள்கின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மேலும் இந்த விஜயத்தை முடித்துக் கொண்டு அமெரிக்காவிலுள்ள தனது பேத்தியையும் பார்க்கவுள்ளதாகவும் கூறப்படுகின்ற