தற்போதைய நிலையில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்மர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அமைச்சர்களான சமல் ராஜபக்ச, பந்துல குணவர்தன, இராஜாங்க அமைச்சர்களான லொஹான் ரத்வத்த, டீ.வி.சாணக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ்.பி.திஸாநாயக்க, அசங்க நவரத்ன, கெவிந்து குமாரதுங்க மற்றும் டயானா கமகே ஆகியோரே இவ்வாறு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

இதேவேளை, அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன ஆகியோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். ஏனையவர்கள் கொரோனாத் தொற்றாளர்களுடன் தொடர்பைப் பேணிய நிலையில் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

தனது வீட்டில் ஊழியர் ஒருவருக்குத் தொற்று உறுதியானதால் தான் தனிமைப்படுத்தலில் இருக்கின்றார் என்று டயானா தெரிவித்துள்ளார்.