சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

இன்று 15ஆம் திகதி முதல் தான் பதவி விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சு குறித்து தற்போது ஊடகங்களில் வெளியாகி வரும் செய்தியினால் அரசாங்கத்திற்கு அசௌகரியம் ஏற்படாத வகையில் தான் தனிப்பட்ட முடிவெடுத்து பதவி விலக  தீர்மானித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் மதுபோதையில் நுழைந்த இராஜாங்க அமைச்சர் தன்னுடைய சகாக்களுடன் இணைந்து தமிழ் அரசியல் கைதிகளை அழைத்து துப்பாக்கி முனையில் மிரட்டியதாக ஊடக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த விடயம் தற்போது உள்நாட்டில் மாத்திரமன்றி ஐக்கிய நாடுகள் சபையிலும் கண்டனத்திற்கு உள்ளாகியது.