பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி, தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் பணிந்தது.

ஆர்லின்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்சில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 17-21, 17-21 என்ற நேர்செட்டில் 28 நிமிடங்களில் டென்மார்க்கின் லின் கிறிஸ்டோபர்சென்னிடம் தோல்வி கண்டு வெளியேறினார். இதேபோல் பெண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி ஜோடி 18-21, 9-21 என்ற நேர்செட்டில் தாய்லாந்தின் ஜோங்கோல்பான் கிதிஹராகுல்-ராவின்டா பிரஜோன்ஜாய் இணையிடம் பணிந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் கிருஷ்ண பிரசாத்-விஷ்ணு வர்தன் ஜோடி 21-17, 21-17 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து இணையான காலும் ஹெம்மிங்-ஸ்டீவன் ஸ்டால்வுட்டை விரட்டியடித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.