மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வருகிறார். இப்போது இவர் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் படம் `குருப்’.

உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் பீரியட் ஃபிலிமாக உருவாகியிருக்கிறது. Indrajith Sukumaran, Sunny Wayne, Shine Tom Chacko, Sobhita Dhulipala எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.துல்கரும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் டீசர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. மலையாளம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு படம் வெளியாக உள்ளது. அதன்படி ஐந்து மொழிகளிலும் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியிருக்கிறார். 2012ல் இவர் இயக்கிய ‘செகண்ட் ஷோ’ மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்தான் துல்கர் சல்மான். துல்கரை அறிமுகப்படுத்திய இயக்குநருடன் மீண்டும் கைகோர்த்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படம் மே மாதம் வெளியாக இருக்கிறது எனச் சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தையடுத்து துல்கர் நடிப்பில் தமிழில் `ஹே சினாமிகா’, `வான்’, மலையாளத்தில்,`சல்யூட்’ ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.