நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 578 பேரில் 171 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

100 பேர் குருநாகல் – கனேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 59 பேர் குளியாப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்திலும் நேற்று 51 தொற்றாளர்கள் பதிவாகியிருப்பதோடு, கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களிலும் 43 பேர் நேற்று இனங்காணப்பட்டிருக்கின்றனர்.