ஆப்கானிஸ்தானில் உள்ள தமது பிரஜைகள் உட்பட ஆப்கானிஸ்தான் பங்காளிகளை தரை மார்க்கமாக வெளியேற்றுவது குறித்த அவதானம் செலுத்துவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 31 ஆம் திகதி அமெரிக்க படையினர் முழுமையாக வெளியேறினர்.

இந்த நிலையில், விமானம் மூலம் வெளியேற்றப்படாத, தகுதியுள்ள மக்களுக்கு உதவுவதற்கான உறுதிப்பாட்டை அமெரிகக அதிகாரிகள் நேற்று வெளிப்படுத்தியதாக வெளிநாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் விரைவில் அறிவிக்கப்படும் என தலிபான்களின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

குறைந்த மட்டத்தில் பெண்களுக்கான பதவிகள் வழங்கப்படும் என்றும், அது உயர் பதவிகளாக இருக்காது என்றும் குறித்த பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், கடந்த 2 தசாப்தங்களாக அரசாங்கத்தில் சேவையாற்றியவர்கள் இதில் உள்ளீர்க்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.