செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசிய தலிபானின் மூத்த உறுப்பினர்இ இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சி பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.

காபூல் (ஆப்கானிஸ்தான்): ஆப்கானிஸ்தானை தாலிபான் கைப்பற்றியுள்ள நிலையில்இ அவர்களது ஆட்சிஇ ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரையிலான முந்தைய தலிபானின் கொடுங்கோல் ஆட்சியை நினைவூட்டுகிறது. ஒட்டு மொத்த உலமும் ஆப்கானில் நடக்கும் நிகழ்வுகளை உன்னிப்ப்பாக கவலையுடன் கவனித்து வருகிறது.

தலிபானின் மூத்த உறுப்பினரான வஹீதுல்லா ஹாஷிமிஇ செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸிடம் பேசுகையில்இ இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஹைபத்துல்லா அகுந்த்ஸடா ஒட்டுமொத்த ஆட்சிப் பொறுப்பில் இருப்பார் என்று கூறினார்.

ஆப்கானில் ஜனநாயக ஆட்சி கிடையாது

தலிபான்கள் அரசாங்கத்தை பற்றிய கேள்விக்கு பதிலளித்த தாலிபானின் மூத்த உறுப்பினர்இ ‘ஆப்கானிஸ்தானின் ஷரியா சட்டங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு இஸ்லாமிய அரசாங்கம் அமையும்இ அது ஜனநாயக முறையாக இருக்காது என திட்ட வட்டமாக தெரிவித்தார்

ஆப்கானிஸ்தான் (யுகபாயnளைவயn) ஆயுதப் படைகளைச் சேர்ந்த முன்னாள் விமானிகள் மற்றும் வீரர்களையும் ஆட்சியில் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றக் காரணமான வீரர்க்களுடன்இ ஆப்கான் ராணுவத்தை சேர்ந்தவர்களுக்கும் பணியாற்ற வாய்ப்பு வழங்கப்படும் என்றார். இராணுவத்தில் சில சீர்திருத்தங்களைச் செய்யஇ சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் அதற்குஇ துருக்கிஇ ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் பயிற்சி பெற்ற ரணுவ வீரர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் மேலும் கூறினார்.

தலிபான் தலைவர் வஹீதுல்லா ஹாஷிமி

ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லைக்கு அருகே ஒரு ரகசிய இடத்தில் ஒரு நேர்காணலின் போது மூத்த தலிபான் தளபதி வஹீதுல்லா ஹாஷிமி ராய்ட்டர்ஸிடம் பேசினார்

ஆப்கானிஸ்தான் அதிபர்

ஆப்கானை ஆளும் தலிபான் அதிபருக்கு தோஹாவில் உள்ள அப்துல் கானி பராதர் முல்லா உமரின் மகன் மவ்லாவி யாகூப்இ ஹக்கானி நெட்வொர்க்கின் தலைவர் சிராஜூதீன் ஹக்கானி ஆகிய 3 துணை அதிபர்கள் இருப்பர் கூறப்படுகிறது.

ஆப்கானிஸ்தானை கட்டமைப்பது எங்கள் வேலை அல்ல: ஜோ பைடன்

இருப்பினும்இ பராதர் தான் அடுத்த அதிபர் என இதுவரை ஊடகங்களில் பெரிதும் பேசப்பட்டது. 1968 இல் உருஸ்கான் மாகாணத்தில் பிறந்த பராதர்இ ஹைபத்துல்லா அகுந்த்ஸடாவுக்குப் பிறகு இரண்டாவது மூத்த தலைவராக உள்ளார். மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்இ இன்று அப்துல் கானி பராதர்இ மிகவும் பேசப்படும் தாலிபானின் மிகவும் குறிப்பிடத்தக்க பொது முகமாகவும் இருக்கிறார்.