ஆப்கானிஸ்தானை, தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து, நாட்டின் பல பகுதிகளில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடி வருகிறார்கள். இதற்கிடையில், தங்கள் நாட்டின் உள்விவகாரங்களில் பாகிஸ்தான் அரசு தலையிடக்கூடாது என்றும் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். காபூலில் ஆர்ப்பாட்டம் நடத்திய பெண்களை தலிபான்கள் தாக்கிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், பெண்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் செய்திகளை சேகரித்து வந்த Nemat Naqdi மற்றும் Taqi Daryabi ஆகிய இரண்டு பத்திரிகையாளர்களை தலிபான்கள் சிறை வைத்தார்கள். அவர்கள் 2 பேரையும் சிறையில் கொடூரமாக தாக்கி கொடுமை செய்துள்ளனர். அதன்பின்பு உடலிலிருந்த காயங்களை புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்கள் அவர்களின் உடலில் கடுமையாக ரத்த காயங்கள் இருக்கும் புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.