அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்புதலின் மூலம் நவம்பரில் டாஸ்மேனியாவில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதும்.

தலிபானின் இந்த ஒப்புதல் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி செய்திச் சேவையிடம், “அணியை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப தலிபான்களிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

2001 இல் தலிபான்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுக்களை தடை செய்தனர்.

பல விளையாட்டு மைதானங்கள் மற்றும் அரங்கங்கள் பொது மரணதண்டனை இடங்களாக பயன்படுத்தப்பட்டன.