ஆப்கானிஸ்தானில் தற்போது நிலவி வரும் பரபரப்பான சூழலில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதியுடன் உரையாடல் நடத்தியுள்ளார்.

தற்போதைய ஆப்கானிஸ்தானின் நிலை தொடர்பில், ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதி ஹமீத் கர்சாயுடன் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரையாடியுள்ளார்.

இந்த தகவலை பிரதமர் தனது ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளார். ஹமீத் கர்சாய் ஆப்கானிஸ்தானில் 2001 முதல் 2014 வரை ஜனாதிபதியாக பதவியில் இருந்துள்ளார்.

அவர் தற்போது தலிபான்களுடன் ஒரு புதிய அரசை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். குறித்த பின்னணியில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதியுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.