ஆப்கானிஸ்தான் தூதுவர்(Ashraf Haidari) க்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் அதிகாரத்தை கைப்பற்றியதன் பின்னரான நிலைமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இணைந்து கொண்டிருந்தார்.

ஆப்கானிஸ்தானில் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து இலங்கைக்கான அந்நாட்டுத் தூதுவர் பிரதமரிடம் விளக்கியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ஹமீட் கர்சாய் உள்ளிட்டவர்கள் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான கூட்டணி ஒன்றை உருவாக்கும் நோக்கிலான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் பேண்தகு சமாதானத்தை நிலைநாட்டுவது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் மக்களுடன் பிரதமர் மஹிந்தவிற்கு காணப்படும் நட்புறவிற்காக நன்றி பாராட்டுவதாக தூதுவர் Ashraf Haidari தெரிவித்துள்ளார்.