ஆப்கானிஸ்தானில் உள்ள மகளிர் கால்பந்தாட்ட அணி வீராங்கனைகளை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக பீஃபா உதவி கோரியுள்ளது.

அவசரமாக அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான வசதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி பீஃபா பல நாடுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள குறிப்பிட்ட வீராங்கனைகள் பெரும் இக்கட்டான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல அரசாங்கங்களுடன் நேரடி தொடர்பினை மேற்கொண்டு வருவதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக ஆப்கானிஸ்தானின் தேசிய அணியின் முன்னாள் தலைவர் காலிடா போபாலும் இதேபோன்ற வேண்டுகோள் ஒன்றை சர்வதேச சமூகத்திடம் கோரியிருந்தார்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நிலையில், பெரும்பாலான உறுப்பினர்கள் தலைமறைவான நிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, பெண்கள் புர்கா மாத்திரமே அணிய வேண்டும் என்ற கொள்கையினை தலிபான்கள் கடைப்பிடிக்கின்றனர்.

இதனை மீறுபவர்களுக்கு எதிராக அவர்கள் கடுமையான தண்டனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.