இணையத்தளத்தினுாடாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்த இளம் யுவதியொருவர் வெள்ளிக்கிழமை (02) வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். முகவர் ஒருவரின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பாணந்துறை, வலான பிரதேசத்தில் வைத்து இப்பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

கண்டி-பூஜாபிட்டியவைச் சேர்ந்த 29 வயதுடை பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பெண் நேற்று வெள்ளிக்கிழமை பாணந்துறை நீதவான நீதிமன்றில் ஆஜராகியதையடுத்து 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இப்பாலியல் தொழிலுடன் தொடர்புடைய ஏனையோரைத் தேடி வாத்துவ காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.