இத்தாலி சென்றிருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அங்கு வசிக்கும் இலங்கையர்கள் குழுவால் (bologna city) இன்று (12) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியை கண்டுபிடித்து உண்மையை வெளிப்படுத்துமாறுகோரி அமைதியான போராட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

போராட்டத்திற்கு இத்தாலிய அரசும் அனுமதி அளித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தற்போதைய அரசாங்கம் நீதியை மறுத்தால், பாதிரிமார்கள் மதகுருமார்களின் ஆதரவின்றி வத்திக்கானுக்கும் சர்வதேச மனித உரிமை கவுன்சிலுக்கும் சென்று தொடர்ந்து போராடுவோம் என்று போராட்டக்காரர்கள் கூறினர்.

போராட்டத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும் குழுவும் சம்பவ இடத்திற்கு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.