இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அசோக மிலிந்த மொரகொடவின் நியமனத்தினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என வெளியான செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவிற்கான  இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்று புதுடில்லிக்கு சென்றுள்ள மிலிந்த மொரகொடவின் நியமனச்சான்றினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என சில தேசிய பத்திரிகைகள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தநிலையிலேயே இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.