இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

லோட்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி தமது முதல் இன்னிங்ஸில் 364 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 391 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து, தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 8 விக்கெட்டுக்களை இழந்து 298 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், ஆட்டத்தை இடைநிறுத்தியது.

பின்னர், 272 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 120 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, 1 க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலையில் உள்ளது.