புதிய வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பக்லேவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் பீரிஸ் நேற்று தமது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றார்.

அதன்பின்னரே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

புதிய வெளிவிவகார அமைச்சருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர், இரு நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பிலும் கலந்துரையாடினார்.