இலங்கைக்கான பிரித்தானியத் தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கலையரசன் ஆகியோரே நேற்றுச் சந்தித்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது தற்போதைய நிலைமைகளுடன் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் எதிர்கொள்ளப்படும் அவலங்கள் அதனை எதிர்கொள்ளக்கூடிய அவசர தேவைகள் தொடர்பிலும் அதற்போது எதிர் நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாகவும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.