மட்டக்களப்பிலிருந்து 1,300 கிலோமீற்றர் தொலைவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 மெக்னிடியூட் அளவில் இன்று காலை 9 மணியளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டிருந்தது.

கடலுக்கு அடியில் 95 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு தற்போது எவ்வித சுனாமி ஆபத்தும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களத்தின் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. எனவே, இலங்கையின் கரையோரப் பகுதிகள் பாதுகாப்பானவையாக குறித்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது அதிகாரம் பெற்ற விடயம்சார் உள்ளூர், சர்வதேச முகவரங்களுடன் கலந்தாலோசித்து வெளியிடப்பட்ட அறிக்கையாகும் என்பதை பொதுமக்களுக்கு அறிவிப்பதாக சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.