பாகிஸ்தானில் இருந்து 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலேயே இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூர் சந்தையில் நிலவும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவினால் இந்த முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.