ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரங்களை தலிபான்கள் கைப்பற்றி வேகமாக முன்னேறிவரும் நிலையில் ஆப்கான் அரசுக்கு உதவுமாறு இலங்கை அரசுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றுவரும் போரில் வேறு எந்த நாட்டையும் விட இலங்கை சிறப்பான பங்கை வகிக்க முடியும் என இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதர் எம். அஷ்ரப் ஹைதாரி தெரிவித்தார்.

தலிபான்களை சமாளிக்க ஆப்கானிஸ்தானுக்கு உதவும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சந்தித்த அனுபவங்களை இலங்கை பகிர்ந்து கொள்ள முடியும் என்று அவர் கூறினார்.

நீண்டகால மோதலால் ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சர்வதேச சமூகத்திற்கு இலங்கை ஆலோசனை வழங்க முடியும் என்று ஹைதாரி குறிப்பிட்டார்