சுவிடசலாந்தின் ஜெனீவா தலைமையகத்தில் இன்று (13) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 48வது கூட்டத் தொடரில் இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கை முன்வைக்கப்படவிருக்கிறது.

இலங்கை நேரப்படி மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில், மனித உரிமை ஆணையாளர் மிசெல் பசலே அவர்களால் வாய்மூல அறிக்கையொன்று சமர்ப்பிக்கவிருக்கிறது.

46வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளின் முன்னேற்றம் சம்பந்மான முன்மொழிவுகள் சம்பந்தமாக இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து கவுன்ஸிலின் 47 உறுப்பினர் நாடுகள் அறிக்கை சமர்ப்பிக்;கவுள்ளன.

இதன்பின்னர், இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆணையரால் முன்வைக்கப்படும் அறிக்கை மீதான விவாதம் நாளை 14ம் திகதி நடைபெறவுள்ளது. அதன்போது, பேரவையின் உறுப்பினர் நாடுகளின் நிரந்த உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஹியுமன் ரைட வொச் ஆகிய சர்வதேச சிவில் அமைப்புகள் கருத்து தெரிவிக்கவுள்ளன. பின்னர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியயும், இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவருமான சி.ஏ சந்திரபிரேம விளக்கமளிக்கவுள்ளார்.

இலங்கையைத் தவிர, ஆப்கானிஸ்தான், நிகரகுவா, எதியோப்பியாவின் டைக்ரே பிராந்தியம், மியன்மார் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் மனித உரிமைகளின் நிலைமை சம்பந்தமாக ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

இந்த மனித உரிமைகள் பேரவை கூட்டத்திற்கு சமமாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஹியுமன் வொச் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையானது, இலங்கையில் தவறான பாதையில் செல்லும் மனித உரிமைகள் நிலைமை சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறுகிறது.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் சுயாதீன அரச நிறுவனங்களை பலவீனமாக்கும் நடவடிக்கைகள், சிவில் நிர்வாகத்தின் சீரழிவு, சட்டத்தின் ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தும் தடைகள் சம்பந்தமாக ஆராய்ந்த இந்த அமைப்பு, சர்வதேச மனித உரிமைகளை சரியாக நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுக்கும் விதமாக மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறுகிறது.