இரத்தினபுரி மாவட்டம், பலாங்கொடை, பெலிஹுலோயா பகுதியில் உள்ள பஹந்துடாவ நீர்வீழ்ச்சியில் நிர்வாணமாக பாலுறவு கொண்ட ஜோடி அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இது போன்ற வீடியோக்களை தயாரித்து, விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.

பஹந்துடாவ நீர்வீழ்ச்சியில் இளம் ஜோடியொன்று நிர்வாணமாக பாலுறவு கொள்ளும் காட்சிகள் அடங்கிய காணொளி சில தினங்களாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இது குறித்து சிஐடியினர் ஆரம்பித்த விசாரணையை தொடர்ந்து, அந்த ஜோடி அடையாளம் காணப்பட்டுள்ளது.

அழகுக்கலை நிபுணரான இளம்பெண்ணொருவரே காணொளியில் தோன்றுகிறார். அந்த பெண்ணின் ஏனைய வீடியோக்களுடன் தொடர்புடைய ஆணே காணொளியில் உள்ளவர்.

இந்த ஜோடி ஏற்கனவே பல ஆபாச வீடியோக்களை தயாரித்துள்ளனர். வெளிநாட்டு ஆபாச தளங்களிற்கு பொருத்தமான வீடியோக்களை தயாரித்து பதிவேற்றியுள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்த வீடியோக்களின் பார்வையாளர் எண்ணிக்கைக்கு பொருத்தமான கட்டணம் உரிமையாளர்களிற்கு வழங்கப்படுகிறது. இலங்கை சமூக ஊடங்களில் அந்த வீடியோ வெளியானது, பார்வையாளர்களை கவர்ந்திழுக்கும் நோக்கமுடையதாக இருக்கலாமென பொலிசார் சந்தேகிக்கினறனர்.

இந்த ஜோடி ஏற்கனவே தயாரித்த பல வீடியோக்களையும் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது. ஆனால், தற்போது வெளியிட்ட பஹந்துடாவ வீடியோ தான் அதிகமான வைரலாகியுள்ளது.

சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்ட அந்த வீடியோ, அழகுக்கலை பெண்ணுக்கு சொந்தமான ஒரு கணக்கிலிருந்து பதிவேற்றப்பட்டுள்ளது. அந்த பெண்ணை சிஐடியினர் கண்டுபிடிக்க இது உதவியுள்ளது.

இலங்கையின் சட்டத்தின்படி, ஆபாச வீடியோக்களை தயாரிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். அதனால் அந்த ஆபாச ஜோடி கைது செய்யப்படுவார்கள்.

nanri athirvu