இலங்கையில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. அத்துடன் நாளொன்றில் பதிவான அதிகமான கொரோனா நோயாளர்கள் இன்று பதிவாகியுள்ளனர் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இன்று 1,716 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 1500ஐக் கடந்துள்ளது. இந்த மூன்று நாட்களில் 4 ஆயிரத்து 909 பேர் கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 862 ஆக உயர்வடைந்துள்ளது.

நோயாளர்களில் 96 ஆயிரத்து 478 பேர் குணமடைந்துள்ளனர் எனவும், 12 ஆயிரத்து 706 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் இராணுவத் தளபதி மேலும் கூறினார்.