2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் குதிரை சவாரி போட்டிக்கு இலங்கை சார்பில் மெட்டில்டா கார்ல்சன் கலந்து கொள்ளவுள்ளார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் குதிரை சவாரி போட்டியில் கலந்து கொள்ளும் முதலாவது இலங்கையர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.