அரசாங்கம் கொண்டு வந்துள்ள கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு அமைய ஜனாதிபதிக்குத் தேவையானால், ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக வெளிநாட்டுப் பிரஜைகளையும் நியமிக்க முடியும் எனவும் அதற்கு எந்த தடைகளும் கிடையாது எனவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.

துறைமுக நகர முதலீடுகளில் முழுமையாக 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும் என அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.

குத்தகை காலத்தை 99 வருடங்களை விடச் சற்று குறைத்திருந்தால், நல்லது. ஆனால், செயற்பாட்டு ரீதியான நிலையில், செலவிட்ட பணத்தை மீண்டும் பெற வேண்டுமாயின் அந்த காலம் அவசியம் என முதலீட்டாளர்கள் கூறியிருக்கலாம்.

இரண்டு தரப்பினரும் கலந்துரையாடி 99 வருடக் குத்தகை என்ற இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

ஆணைக்குழு சட்டத்திற்கு அமைய அதன் உறுப்பினர்களாக இலங்கையர்கள் மாத்திரமே இருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் கிடையாது. இலங்கை பிரஜை என்றால், எனக்கு பிரச்சினையில்லை.

எனினும் முதலீடுகளைக் கொண்டு வர முடிந்தவர் என்றால், அவர் வெளிநாட்டவராக இருந்தாலும் பிரச்சினையில்லை எனவும் அலி சப்றி குறிப்பிட்டுள்ளார்.