இலங்கை மத்திய வங்கியின் 16-ஆவது ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் சற்று நேரத்திற்கு முன்னர் பதவியேற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கும் அரச நிறுவனங்களின் நிலையான அபிவிருத்திக்கும் நடவடிக்கை எடுப்பதாக அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.