கொரோனா பரவல் காரணமாக இலங்கை முழுவதிலும் பயணத்தடையை விதிக்க அரசாங்கம் தீவிர ஆலோசனை நடத்திவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த வகையில் நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி செயலக மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி எவ்வளவு நாட்களுக்கு நாட்டை முடக்கிவைப்பது என்பது பற்றிய தீர்மானத்தை ஜனாதிபதி நாளை அறிவிப்பார் எனவும் தெரியவருகின்றது.

எனினும் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படலாம் என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.