பங்களாதேஷ் இளையோர் 19 வயதுப்பிரிவு ஆண்கள் கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த சுற்றுப் பயணத்தின்போது பங்களாதேஷ் அணி, இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும். இப் போட்டிகள் அனைத்தும் கொவிட்-19 உயர் பாதுகாப்பின் கீழ் நடைபெறவுள்ளன.

இந்த தொடர் 2022 இளையோர் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்களை அடையாளம் காண்பதறந்கு சிறந்த களமாக இருக்கும் என்று புதிதாக நியமிக்கப்பட்ட 19 வயதுப்பிரிவு பயிற்சியாளர் அவிஷ்கா குணவர்தன கூறினார்.