தங்கள் நாட்டு எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து ஒய்நெட் செய்தி வலைதளத்துக்கு இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெஞ்சமின் கான்ட்ஸ் வியாழக்கிழமை அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்க இஸ்ரேல் தயாராக உள்ளது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை கட்டாயம் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இனி உலகின் மற்ற நாடுகளும் ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா். பெஞ்சமின் கான்ட்ஸின் இந்த எச்சரிக்கை குறித்து ஈரான் உடனடியாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. எனினும்இ முன்னதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு நியூயாா்க்கிலுள்ள ஈரான் துணைத் தூதா் ஸஹ்ரா எா்ஷாடி எழுதியுள்ள கடிதத்தில்இ ‘மேற்கு ஆசியப் பிராந்தியத்தின் நிலைத்தன்மையையும் பாதுகாப்பையும் இஸ்ரேல் 70 ஆண்டுகளுக்கும் மேலாக குலைத்து வருகிறது.

அந்தப் பிராந்தியத்தின் கடல்வழியாக செல்லும் வா்த்தக மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துக் கப்பல்களை இஸ்ரேல் நீண்டகாலமாக தாக்கி வருகிறது. எண்ணெய் மற்றும் நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு சிரியா சென்ற 10-க்கும் மேற்பட்ட வா்த்தகக் கப்பல்களை இஸ்ரேல் தாக்கியுள்ளது’ என்று குற்றம் சாட்டியுள்ளாா். தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை ஈரான் உறுதி செய்யவும் அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்ளவும் ஒப்புக்கொண்டுஇ இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2015-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக கடந்த 2018-ஆம் ஆண்டில் அப்போதைய அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா். அதன் தொடா்ச்சியாகஇ ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் விதித்தாா்.அதற்கு ஓராண்டுக்குப் பிறகுஇ ஓமன் வளைகுடா பகுதியில் சரக்குக் கப்பல்களில் மா்மமான முறையில் அடிக்கடி வெடிவிபத்துகள் ஏற்பட்டன. இந்தச் சம்பவங்களுக்கு ஈரானின் சதிச் செயல்தான் காரணம் என்று அமெரிக்காஇ இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. கப்பல்களின் அடிப்பகுதியில் கண்ணிவெடிகள்இ குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு வெடிக்கக் கூடிய வெடிகளைப் பொருத்தி இந்தத் தாக்குதல் நடத்தப்பபட்டதாக அந்த நாடுகள் கூறின.

எனினும்இ இந்தக் குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்து வந்தது.இதற்கிடையேஇ ஈரானின் கப்பல்களிலும் அடிக்கடி மா்மத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த நாட்டின் மிகப் பெரிய போா்க் கப்பலான காா்க்இ கடந்த ஜூன் மாதம் எரிந்து மூழ்கியது. அந்தக் கப்பல் மீது தாங்கள் தான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பின்னா் தெரிவித்தது. இதனால் ஓமன் வளைகுடா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில்இ லண்டனில் செயல்பட்டு வரும் ஸோடியாக் மாரிடைம் நிறுவனத்தின் எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் கடந்த வாரம் சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானது.

இதில் இரு கப்பல் பணியாளா்கள் உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் பிரிட்டனைச் சோ்ந்தவா்; மற்றொருவா் ருமோனியா நாட்டவா். ஸோடியாக் மாரிடைம் லண்டனில் செயல்பட்டு வந்தாலும்இ அந்த நிறுவனம் இஸ்ரேலைச் சோ்ந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும். லைபிரீயக் கொடியேற்றிச் சென்ற எம்வி மொ்சிா் ஸ்ட்ரீட் கப்பல்இ ஜப்பானுக்குச் சொந்தமானதாகும். இந்தத் தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. எனினும்இ ஈரான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளது. இந்தச் சம்பவத்தின் தொடா்ச்சியாகஇ ஓமன் வளைகுடாவில் ஐக்கிய அரபு அமீரகக் கப்பல் கடத்தி புதன்கிழமை விடுவிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகக் கடல் பகுதியில்இ பனாமா கொடியேற்றப்பட்ட ‘ஆஸ்ஃபால்ட் பிரின்சஸ்’ என்ற அந்தக் கப்பல் அடையாளம் தெரியாத நபா்களால் செவ்வாய்க்கிழமை இரவு கடத்தப்பட்டதாக பிரிட்டன் கடற்படை தெரிவித்தது. அந்தக் கப்பல் ஈரானை நோக்கி சென்று கொண்டிருந்ததாகவும் பின்னா் புதன்கிழமை காலை அது விடுவிக்கப்பட்டு மீண்டும் ஓமனை நோக்கித் திரும்பியதாகவும் செயற்கைக்கோள் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஓமன் வளைகுடா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடக்கும் நிழல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவே இந்தச் சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்தச் சம்பவங்களுக்கு பதிலடியாக ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சா் பெஞ்சமின் கான்ட்ஸ் தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளாா்.