நாம் புதிய காலனித்துவத்தின் போக்கை புரிந்துகொள்ளும் தருணத்தில், அது காலம் கடந்த நிகழ்வாக மாறியிருக்கும். ஆனால் நாம் அதை புரிந்து கொள்வது இன்னும் பல காலம் கடந்தே என்பது அபாயகரமான விடயமாகும். எவ்வாறாயினும் நாம் புதிய காலனித்துவத்தை புரிந்துகொண்டு அதற்கு எதிராக செயல்படும் போது நாம் நவீன முதலீட்டின் உரிமையாளர்களால் இன்னொரு சுற்று அடிமைத்தனத்தின் உச்சத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருப்போம். நாம் அதனை புரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தில் எமக்கு போரிடுவதற்கு பூமியும் தேசமும் சூழலும் மக்களும் மற்றும் சந்தர்ப்பமும் எஞ்சியிருக்காது. அதற்குப் பதிலாக எமக்கு எஞ்சியிருப்பது நவீன செயற்கை புத்தியால் ரோபோ தொழில்நுட்பத்தால் 5G, 6G தொடர்பாடல் தொழில்நுட்பத்தால் சூழப்பட்ட சிறையில் கைதிகளாக செயற்கை புத்தி மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் முதலீட்டு உரிமையாளர்களால் மரபணு ரீதியில் மாற்றப்பட்ட உலகமக்களாக மாறி இருப்போம். அதேபோன்று அந்த செயற்கை அறிவு மற்றும் புதிய தொழில்நுட்ப முதலீட்டு உரிமையாளர்கள் மேலே குறிப்பிட்ட சாதாரண உலக மக்களை, அவர்களுக்கு வேண்டியவாறு ஆளும் `கட்டுப்படுத்தக்கூடிய உலக விலங்கு பிரிவாக’’ மாற்றி இருப்பார்கள் என்று கூறுவது ஆச்சரியமான விடயமல்ல.

தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு

1796 ல் எட்வர்ட் ஜெனரால் (Edward Jenner) அம்மை நோய்க்கான தடுப்பூசியை கண்டுபிடித்தது தொடக்கம் இன்றுவரை தொற்று நோய்களுக்கு தடுப்பூசி மூலம் சிகிச்சை அளித்து உலக மக்கள் நோய்களிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்கள். இந்த தடுப்பூசி தயாரிக்கும் தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருகின்றது. தடுப்பூசி மூலம் மனிதனின் தொற்று நோய்களுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி உற்பத்தி செய்யப்பட்டாலும் ஓரளவு பக்க விளைவுகள் ஏற்படுவது அத் தொழில்நுட்பத்துக்குரிய குறைபாடாகும்.

உலகில் ஆயுத விற்பனையை விட மேற்குலக மருந்து உற்பத்தி மற்றும் விற்பனை உலகம் இலாபகரமானது. அதனால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் ஏனைய வர்த்தகங்களுடன் மருந்து உற்பத்திக்கும் முதலீடு செய்கின்றன.

மருந்து உற்பத்தி என்பது உண்மையில் மனித தேவைக்கு அப்பால் இலாபத்துக்காக மேற்கொள்ளப்படும் உற்பத்திப் பிரிவின் வர்த்தகமாக புத்திஜீவிகள் ஏழு தசாப்தங்களுக்கு முன்னரே புரிந்து கொண்டிருந்தார்கள்.

மருந்து உற்பத்தியின் ஆரம்ப காலகட்டத்தில் தடுப்பூசி உற்பத்தி பன்னாட்டு நிறுவனங்களுக்கு இலாபத்தை பெற்றுக் கொடுக்கவில்லை. ஏனென்றால் நோய் தடுப்பினை மேற்கொள்ள வேண்டியது நோய் தாக்காத சந்தர்ப்பத்திலாகும். அதற்காக அந்நாடுகளில் சுகாதார நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்துவதால் சந்தை பிரசாரம் மூலம் இயக்கக்கூடிய சந்தையை உருவாக்குவது சிரமமாகும். அத்துடன் தடுப்பூசியை உற்பத்தி செய்வதற்கு பெருமளவு பணம் மற்றும் காலமும் தேவைப்படுகிறது. சாதாரணமாக தடுப்பூசி ஒன்றை உற்பத்தி செய்து சரியான முறையில் அதனை உறுதி செய்வதற்கு குறைந்தபட்சம் பத்து வருடங்கள் தேவைப்படும். அண்மைக் காலம் வரை தேசிய அரசாங்கங்களின் பணத்தின் மூலமோ மற்றும் உலக சுகாதார அமைப்பின் வேண்டுகோளின்படி தடுப்பூசி தயாரிக்கும் நடவடிக்கை இலாபம் ஈட்டும் வர்த்தகமாக மாற்றுவதற்கு செய்ய வேண்டிய பல வழிமுறைகள் மற்றும் ஆய்வுகள் செய்யப்பட்டன.

இலாபகரமான தடுப்பூசி வர்த்தக சந்தை

தடுப்பூசி உற்பத்தியை இலாபகரமானதாக மாற்றுவதற்கு அவ் வர்த்தகத்தில் உடனடியாக எடுக்கவேண்டிய நான்கு நடவடிக்கைகள் அறிந்து கொள்ளப்பட்டன.

1.தடுப்பூசியை அதிக இலாபத்தில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் சம்பிரதாய முறைகளுக்கு அப்பால் சென்று மிக விரைவாக மற்றும் இலகுவாக தடுப்பூசி உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல்.

2. அத்தொழில் நுட்பத்தை உபயோகித்து தற்போது தடுப்பூசி ஒன்றை உற்பத்தி செய்து பாவிப்பதற்காக எடுக்கும் காலத்தை குறைக்கவும் அது தொடர்பான சர்வதேச தரம் மற்றும் சட்டங்களை தளர்த்துதல்.

3. குறுகிய காலத்தில் பெருமளவு தடுப்பூசிகளை உற்பத்தி செய்தல் மற்றும் அதற்கான விசேடமாக உருவாக்கப்பட்ட சந்தையை அமைத்தல்.

4. தடுப்பூசியை எவ்வித விவாதமும் இன்றி பெற்றுக்கொள்வதற்காக உலகில் உள்ள அனைத்து நாடுகள் மற்றும் நாடுகளின் தலைவர்கள், உயர் அரச அதிகாரிகள் மற்றும் உலக மக்களை அதன்பால் திருப்புவதற்கான வர்த்தக முன்னெடுப்புகளை உருவாக்குதல்.போன்ற நான்கு விடயங்களாகும் .

மேற்குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றிக் கொண்டால் தடுப்பூசி தயாரிப்பை முதலிடத்தில் உள்ள இலாபகரமான வியாபாரமாக மாற்றிக் கொள்ளலாம். அதற்காக தடுப்பூசி பற்றி ஆய்வு செய்யும் நிறுவனங்களுடன் இணைந்து கொண்ட உலகின் முதலாவது பணக்காரரான பில்கேட்ஸின் புதிய முதலீட்டு திட்டமாக 2006 ம் ஆண்டு தொடக்கம் திட்டமிட்டு ஆரம்பிக்கப்பட்ட தடுப்பூசி உற்பத்தி திட்டம் தற்போது பயனளிக்க தொடங்கியுள்ளது. பில்கேட்ஸ்Bill and Melinda Gates Foundation என்னும் சர்வதேச அரசல்லாத அமைப்பு மூலம் தடுப்பூசி தொடர்பாக பல பரிசோதனைகள் டொலர் பில்லியன் அளவில் செலவிடப்பட்டு மூன்றாம் உலக நாடுகளில் மேற்கொள்ளப்பட்டன. அன்று தொடக்கம் வைத்தியர் அல்லாது பில்கேட்ஸ் வைத்தியர் போன்று தன்னுடைய கருத்தை கூறி உலக சுகாதார அமைப்பு மற்றும் ஏனைய உலக நாடுகளின் சுகாதார துறைகளில் தனது பண பலத்தை உபயோகித்து ஆக்கிரமித்தார் . பில்கேட்ஸ் உலக சுகாதாரத்துறையில் சிறப்பானவராக தொற்று நோயால் பாதிக்கப்படும் ஏழை மக்களை காப்பாற்றும் செவிலியர் ஆகவும் மற்றும் நட்சத்திரமாகவும் தெரியத் தொடங்கினார். ஆனால் அவரால் ஏழை நாடுகளின் மக்கள் ஆய்வு கூட எலிகளாக மாற்றப்பட்டு அவரது எதிர்கால தடுப்பூசி வர்த்தகத்துக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

2006 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அவரின் Bill and Melinda Gates Foundation என்னும் அரசு அல்லாத அமைப்பு அதுவரை காலமும் உலகில் பிரபலமாக அறியப்படாத கருப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸ்க்கான (Human Papilloma Virus-HPV) தடுப்பூசியை வழங்கும் திறனை பரிசோதனைக்கு உட்படுத்தியது. அவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்ட அறிக்கை எனக்கூறி நவீன உலகில் மார்பகப் புற்றுநோயையும் தாண்டி முதலிடத்தில் வைரஸ் மூலம் பரப்பப்படும் நோயாக கருப்பை வாய் புற்றுநோய் விரைவாக பரவி வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியமானது என பிரசாரம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் அதற்காக தயாரிக்கப்பட்ட தடுப்பூசியொன்று உள்ளதாகவும் அதனை ஏழைநாடுகளில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக கூறி இந்தியா,பெரு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் சுகாதார பிரிவின் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அந்நாடுகளில் தடுப்பூசியை வழங்கத் தொடங்கியது. 2006 ஆம் ஆண்டு அமெரிக்க FDA நிறுவனத்தால் அத் தடுப்பூசிக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தியாவில் இந்தத் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதற்கு Bill and Melinda Gates Foundation முன் வந்ததோடு 2009 ஆம் ஆண்டு இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் முதலாவது தடுப்பூசி வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தது. அதன் பின்னர் தடுப்பூசி வழங்கப்பட்ட ஏழு பெண் குழந்தைகள் மரணமடைந்ததால் ஏற்பட்ட மக்கள் விரோதம் காரணமாக மேற்கொண்ட பரிசோதனை மூலம் அம் மரணங்கள் தடுப்பூசி காரணமாக ஏற்பட்டது அல்ல வேறு காரணங்களால் ஏற்பட்டது என குஜராத் அதிகாரிகள் கூற முயற்சி செய்தார்கள். ஆனால் மீண்டும் இந்திய `Parlimentary Standing Commitee on health and family welfare’ மூலம் செய்யப்பட்ட பரிசோதனைகள் மூலம் அது தடுப்பூசியினால் ஏற்பட்ட பக்க விளைவுகளால் நிகழ்ந்த மரணங்கள் என உறுதி செய்யப்பட்டது. அதைத் தவிர மேலும் எண்பது சிறுமிகள் தடுப்பூசி ஏற்றப்பட்ட பின் மரணமடைந்ததால் தடுப்பூசியின் பயங்கரம் உறுதிசெய்யப்பட்டது. அத்துடன் இந்திய சுகாதாரத் துறையில் உள்ள தரம் மற்றும் அடிப்படை உரிமை மீறப்பட்டதாக இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதன் பேரில் அந்த தடுப்பூசி இந்தியாவில் வழங்குவது தடுக்கப்பட்டது. அதனுடன் இணைந்ததாக உலகில் பல நாடுகளும் இந்த தடுப்பூசி பாவனையை நிறுத்தின.

இலங்கையிலும் HPV தடுப்பூசியை கட்டாயமாக்க 2017ஆம் ஆண்டு உயர் அதிகாரிகளும் சுகாதார அமைச்சரும் முயற்சி செய்தார்கள்.

உலக சனத்தொகையில் 50 வீதமான பெண்களுக்கு இந்த நோய் தொற்றும் என பீதியை ஏற்படுத்தி இந்த தடுப்பூசி விற்பனையை மேற்கொள்ள நினைத்தவர்களின் எண்ணம் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்பால் புதைந்து போனது. ஆனால் 20 தொற்று நோய்களுக்கான ஆய்வுகள் அந்நிறுவனத்தால் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதில் பறவைக்காய்ச்சல், பன்றிக் காய்ச்சல, SARS, MERS போன்ற நோய்த்தொற்றுகள் குறித்து உலக மக்களிடையே ஊடகங்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் பிரசாரம் செய்து உலக மக்களை ஆபத்தின் விளிம்புக்கு கொண்டு சென்றுள்ளார்கள்.

2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் பறவை காய்ச்சலுக்கான தடுப்பூசியை இலங்கை சுகாதார அதிகாரிகளும் 70 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தியதோடு அவை காலாவதியான பின்னர் அழிக்கப்பட்டன.

உலகையே உலுக்கி அதன் பயணத்தை நிறுத்தியுள்ள கொரோனா தொற்று

இன்று நாம் முகம் கொடுத்துள்ள கொரோனா தொற்றின் ஆரம்பம், பரவல் மற்றும் உலக நிலைமையை கருத்தில் கொள்ளும்போது அதன் விஞ்ஞான பின்னணிக்கும் அப்பால் பொருளாதார அரசியல், பின்னணி மற்றும் சரித்திர மரணத்திற்கு அப்பால் சென்று ஆராய்வது பொருத்தமானதாகும்.

2003 பெப்ரவரி மாதம் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய கொரோனா வைரஸால் பரவும் நோய் SARS என அறியப்பட்டது.

கொரோனாபற்றி சாதாரண மக்கள் அறிந்திருக்க விட்டாலும் விஞ்ஞானிகள், தொற்று வேதியியலாளர்கள் அது தொடர்பான நபர்கள், நிறுவனங்கள் அதனை பற்றி நன்கு அறிந்திருந்தனர். பல நிறுவனங்கள் இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டிருந்தன. அங்கு கொரோனா வைரஸ் இனங்களை அறிதல், அதன் கட்டமைப்பை அறிந்து கொள்ளல் மற்றும் வேறுபடுத்தல் மூலம் அதன் மரபணு தோற்றம் தொடர்பான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய பேடன்ட் அனுமதிப்பத்திரத்தை பெற்று அதிக விலைக்கு தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு விற்பனை செய்வது சாதாரண செயலாகும்.

பில்கேட்ஸ் கொரோனா வைரஸ் மாதிரிக்கான பேடன்ட் அனுமதிப்பத்திரத்தை 2012 ஆம் ஆண்டிலேயே தம்வசம் வைத்திருந்தார். பயங்கரமான வைரஸ் தொற்று உலகில் பரவும் என பில்கேட்ஸ் 2015 ஆம் ஆண்டிலேயேTedTalk உரையின்போது எதிர்வு கூறியிருந்தார்.

அரச மற்றும் தனியார் துறை தொழில் முடிவுகளை பிரபலப்படுத்த1970 களில் ஆரம்பிக்கப்பட்டworld Economic Forum என்னும் அரசு அல்லாத அமைப்பால் 2016ல் அதன் தலைவர் Kluas Schwab ஆற்றிய உரையின் சுருக்கத்துக்கு அமைய இன்று உலகம் நாலாவது கைத் தொழிற்புரட்சிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அதற்காக உலகப் பொருளாதாரத்தை மீளுருவாக்கம் செய்யவேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். செயற்கை அறிவு, ரோபோதொழில்நுட்பம், உயர் தகவல் தொழில்நுட்பம்,மரபணு பொறியியல் தொழில்நுட்பம், சாரதியற்ற வாகனம்,மூளையுடன் இணைக்கப்பட்ட சிப் மூலம் மனிதர்களை கட்டுப்படுத்தும் உலகம் 2025,2030 ஆண்டளவில் காணமுடியும் என அவர் எதிர்வு கூறியிருந்தார். அதனை நிறுத்த முடியாது எனவும் அதற்கு முகம் கொடுக்க உலகப் பொருளாதாரத்தை முற்றுமுழுதாக மாற்றி மீண்டும் ஸ்தாபிக்க (Economic Reset) வேண்டும் என கூறியிருந்தார் .

திட்டமிட்டு கொரோனா வைரஸை பரப்பி முழு உலக மக்களையும் பாதிப்புக்குள்ளாக்கி ஆதரவற்ற நிலமைக்கு கொண்டு சென்று பீதியை ஏற்படுத்தி உறுதி செய்யப்படாத “மரபியல் வைப்பீடு“தடுப்பூசி என குறிப்பிட்டு பலவந்தமாக தடுப்பூசி செலுத்தலுக்கு முழு உலகையும் கொண்டு சென்று பில்கேட்ஸ்கள் இன்று இந்த பூமியை ‘klaus Schwab’ன் கூற்றுப்படி Economic Reset க்காகவா?

Event 201, ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்துடன் பில் மற்றும் மெலிண்டா மன்றம் இணைந்து 50 மில்லியன் டாலர் செலவில் 2019 அக்டோபர் மாதம் 18ஆம் திகதி நியூயார்க் நகரில் நடைபெற்றது. அங்கு உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படும் விதம் குறித்தும் அதன் விளைவுகள் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் விதம் குறித்தும் கணனி உருவகப்படுத்தல் மூலம் காண்பிக்கப்பட்டது.

முதல் 18 மாதங்களுக்குள் 65 மில்லியன் மக்கள் மரணம் அடைவார்கள் என்றும், பின்னர் வெற்றிகரமாக தடுப்பூசியை கண்டுபிடித்த பின்னர் அம்மக்களில் நூற்றுக்கு 80%- 90% மானோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்படும் வரை இந்நோய் உலகம் பூராவும் பரவும் விதம் குறித்தும் தடுப்பூசி மூலம் கட்டுப்படுத்தப்பட்டு அதன்மூலம் சிறுவர்களுக்கு மாத்திரம் பின்னர் அங்குமிங்கும் தொற்றும் நிலமை காணப்படும் என்றும் உருவகித்து காட்டப்பட்டது.

கொரோனா தொற்றின் மரண எண்ணிக்கையில் மாற்றம் காணப்பட்டாலும் கடந்த 18 மாதங்களின் பின்னர் தற்போது பீதியை ஏற்படுத்தி நித்திய சந்தையை தடுப்பூசிக்கு உருவாக்கியுள்ள நிலைமை அன்று கூறப்பட்ட எதிர்வு கூறல் தற்செயலான ஒன்றல்ல என்பது சிறுவர்களுக்குக் கூட புரிந்திருக்கும்.

பில்கேட்ஸின் இந்த கூற்றின் ஒரு மாதத்திற்கு பின்னர் முதலாவது கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளி 2019 நவம்பர் 17ஆம் திகதி சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட தோடு 2019 டிசம்பர் முடிவில் சீனாவின் ஹுபே பிராந்திய வூஹான் நகரில் ஒரே மாதிரியான நோய் அடையாளங்களுடன் கூடிய புதிய அறிகுறிகளுடன் கொரோனா வைரஸ் சீன விஞ்ஞானிகளால் முதற்தடவையாக கண்டுபிடிக்கப்பட்டது.

Event 201 மகாநாட்டில் உலக அளவிலான தொற்றின் போது உலகம் முகம் கொடுக்கும் பொருளாதார, சமூக பிரச்சினைகள் தொடர்பாக பேசினார்கள். அதற்கு முகம் கொடுக்க முன்வைக்கப்பட்ட யோசனைகள்.

4IR fourth industrial revolution on the ultraviolet background of polygon world map globe with blockchain technology peer to peer network. Fourth industrial revolution business banner concept.

1. நம்பிக்கையான பொது நிறுவனம்

2. தேசிய அரசாங்கம்

3. சர்வதேச அமைப்புகளின் பொறுப்பு மற்றும் அதன் கட்டமைப்புகள் மாற்றப்பட வேண்டிய விதம் குறித்து பேசினார்கள்

அங்கு கூறப்பட்ட யோசனைகள்

1. உலகளவில் தடுப்பூசியை செயல்திறனுடன் உற்பத்தி செய்தல் மற்றும் விநியோகிப்பதற்கு தேவையான பொறிமுறையை தயாரித்தல்.

2. பொது நிறுவனத்திடம் உள்ள தொழில்நுட்பம் நிதி வலுவை பயன்படுத்தி அவர்களுக்கு தடுப்பூசி தயாரிக்க மற்றும் விநியோகிக்க தேசிய அரசாங்கங்கள் அவர்களின் சுகாதார சட்டத்திட்டங்களை தளர்த்துதல்.

3. தடுப்பூசியை கட்டாயமாக்கல்.

4. பாரிய அளவில் தடுப்பூசியை உற்பத்தி செய்வதன் மூலம் தடுப்பூசியை சரியான முறையில் உலகம் பூராவும் விநியோகம் செய்வதற்கு வலையமைப்பை உருவாக்கல் மற்றும் அதற்காக உலக சுகாதார அமைப்பு போன்ற நிறுவனங்கள் மற்றும் தேசிய அரசாங்கங்களின் மூலம் வசதிகளை பெறல் போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

5. மாற்று சிகிச்சைகளை அறிமுகப்படுத்தும் விஞ்ஞானிகள் மற்றும் இந்த நடவடிக்கைகளின் குறைகளை சுட்டிக்காட்டும் தொற்றுநோய் வேதியியலாளர்களின் குரலை அடக்குதல் மற்றும் கட்டுப்படுத்தல்.

6. இந்த உலகளவிலான வியாபாரத்திற்கு எதிராக குரல் எழுப்பும் அரச தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகளை அகால மரணங்கள் மூலம் அகற்றுவது வரை இந்த தடுப்பூசி வர்த்தகம் கொடூரமானது.

(தற்போது கொரோனா தடுப்பு ஊசிக்கு எதிர்ப்பு தெரிவித்த 5 பேர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்கள்.ஹெய்டி இராச்சியத்தின் தலைவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் கொல்லப்பட்டு ஒரு வார காலத்தில் கொரோனா தடுப்பூசி தொகையொன்று அமெரிக்க அரச தலைவரால் அந்நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது.)

இறுதியில் 7.4 பில்லியன் உலக மக்கள் கட்டாயமாக தடுப்பூசி வழங்கலுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் வருடாந்த தடுப்பூசி செலுத்தல் அதிக இலாபம் ஈட்டும் வர்த்தகமாக உலக தடுப்பூசி தயாரித்தல் மாற்றமடையும். உலகின் அனைத்து தேசிய அரசாங்கங்களுக்கு மேலாக பொது நிறுவனத்தை வைக்க நடவடிக்கை எடுத்த பின்னர் பொது நிறுவனம் மற்றும் சர்வதேச அரசு அமைப்புகளுக்கு தேவையான விதத்தில் பொருளாதாரத்தை மீள் கட்டமைத்தல் மூலம் உலகையே ஒன்றாக சுரண்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ள. நவீன உலக சீரமைப்பு என்னும் பொறி முறையை முற்றாக நிறைவேற்றிக் கொள்ளும் திட்டத்துக்கு எம்போன்ற பலவீன தேசிய அரசாங்கங்கள் விருப்பத்துடனோ அல்லது விருப்பம் இல்லாமலோ அடிமையாகின்றன. இந்த பாரிய பிறழ்வுக்கு இதனை புரிந்து கொண்ட பிரிவினராலும் மற்றும் அவர்களால் கண்டுபிடிக்கப்படும் சுயாதீன மற்றும் தன்னிறைவான தேசிய முறைகளால் மாத்திரமே முகம் கொடுக்க முடியும்.

தொடர்ந்தும் நீங்கள் சுய விருப்பத்துடன் விலங்கு மாட்டிக்கொண்டு அடிமையாக வாழ்வதா அல்லது அதற்கு எதிராக போராட்டம் நடத்துவதா என்பதிலேயே உலகின் நாளைய தினம் முடிவு செய்யப்படும். முடிவு உங்கள் கைகளில்.

தமிழில்: வீ.ஆர்.வயலட்