அரசாங்கம் நண்பர்களுக்கு மட்டும் சேவையாற்றி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்த் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இன்றைய தினம் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

இந்த அரசாங்கம் உண்மையை மறைத்தல், என்டிஜன் மோசடி, மருந்துப் பொருள் மோசடி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அனைத்து அனர்த்தங்களினால் நாட்டு மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஊழல் மோசடிகளுக்கு உச்ச அளவில் ஒத்துழைப்பு வழங்கும் அரசாங்கமொன்றே தற்பொழுது ஆட்சியில் உள்ளது.

அரசாங்கத்தினால் மக்களுக்கு செய்ய வேண்டிய நலன்த் திட்டங்களை எதிர்க்கட்சி செய்து வருகின்றது.

உண்மையில் நாட்டு மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமாயின் ஆளும் கட்சி உறுப்பினர்களை போஷிக்காது நாட்டு மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென சஜித் தெரிவித்துள்ளார்.