முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70வது ஆண்டு விழா இன்று இடம்பெறவுள்ள நிலையில், அவர் விசேட அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் முன்னாள் ஜனாதிபதியின் இந்த அறிக்கை குறித்து கொழும்பு அரசியல் தரப்பினர்கள் தீவிர கவனம் செலுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இது குறித்து சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கோவிட் தொற்று காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 70வது ஆண்டு விழா பொது மக்களின் பங்களிப்பு இல்லாது மிகவும் எளிமையாக கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத்தின் கூட்டணி கட்சியாக மக்கள் முன்னணியின் எதிர்காலம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அடிப்படையாகக் கொண்ட ஒரு தனி கூட்டணியை உருவாக்குவது பற்றியு முன்னாள் ஜனாதிபதி தனது கருத்துக்களை வெளியிடுவார் என்று அறியப்படுகின்றது.

இதேவேளை, எதிர்கால அரசியல் பயணத்துக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் தனி கூட்டணி அமைப்பது குறித்து கட்சியின் மத்திய குழு ஏற்கனவே முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.