நாடாளுமன்றத்தை முடக்குவது தேச விரோத செயல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

காணொளி காட்சி மூலம் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘நாடாளுமன்ற அலுவல்களை முடக்க எதிர்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. அவர்களது ஒரே நோக்கம், நாட்டின் வளர்ச்சிப்பாதையில் முட்டுக்கட்டை ஏற்படுத்துவதுதான். இது தேச விரோதமாகும்.

இந்தியா தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நாட்டின் முன்னோக்கிய இந்த இயக்கத்தை எதிர்கட்சிகளால் தடுக்க முடியாது’எனத் தெரிவித்தார்.