பண்டோரா ஆவணத்தின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமாக இருக்கலாம். ஆகவே அவ்விடயம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா- கொத்மலை, இறம்பொடை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் அமைச்சர் சீ.பீ.ரத்னாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “பண்டோரா ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஜனாதிபதி குழுவொன்றை அமைத்துள்ளார்.

குறித்த குழுவின் அறிக்கை வெளிவந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும். எவரையும் பாதுகாக்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு ஒருபோதும் கிடையாது.

பண்டோராவின் நோக்கம் டயஸ்போராவின் நோக்கமெனின் அதனையும் நாட்டுக்கு வெளிப்படுத்துவோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.