ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகேவின் கட்சி உறுப்புரிமையை நீக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒழுக்காற்று குழுவின் ஆலோசனைக்கமைய கட்சியின் நிறைவேற்றுக்குழு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டயனா கமகே, 20ஆம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில், ஆளுங்கட்சிக்கு ஆதரவாக வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.