எதிர்வரும் 19ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள இந்தியன் பிரிமியர் லீக் தொடரை நேரில் சென்று பார்வையிட ரசிகர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மைதானத்திற்குள் சென்று ஐ.பி.எல் போட்டிகளை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இந்தியாவில் இடம்பெற்றிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில், அதன் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாய், சார்ஜா மற்றும் அபுதாபியில் இடம்பெறவுள்ளது. ரசிகர்களுக்கான அனுமதி சீட்டுக்கள் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த முறை இடம்பெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரை நேரில் சென்று பார்வையிடுவதற்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது