ஒருகொடவத்தை பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் காவற்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சந்தேக நபர்களிடமிருந்து போலி 100 ரூபா நாணயத்தாள்கள் 25, 500 ரூபா நாணயத்தாள்கள் 18 மற்றும்  1000 ரூபா போலி நாணயத்தாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை போலி நாணயத்தாள்களை வடிவமைக்க மற்றும் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட, மடிக் கணினி, இயந்திரம் போன்ற உபகரணங்களும் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

போலி நாணயத்தாள்கள் குறித்து கிராண்ட்பாஸ் காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாகவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.