ஆப்கானிஸ்தானில் இரு தரப்புக்கும் இடையே நடந்த சண்டையில் 350 தாலிபான்களை கொன்றுவிட்டதாகவும், 45 பேரை சிறை பிடித்து இருப்பதாகவும் பஞ்ச்ஷிர் வடக்கு கூட்டணி படையின் செய்தி தொடர்பாளர் கூறி இருக்கிறார்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கும் பஞ்ச்ஷிர் வடக்கு கூட்டணி படையினருக்கும் இடையே நேற்று இரவு முதல் மோதல் நடந்து வருகிறது. முதலாவதாக நடந்த தாக்குதலில் 8 தாலிபான்கள் கொல்லப்பட்டதை அடுத்து ஏராளமான தலிபான் படையினர் அந்த இடத்தை சுற்றிவளைத்தார்கள்.

அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.

இதில் 350 தாலிபான்களை கொன்றுவிட்டதாகவும், 45 பேரை சிறை பிடித்து இருப்பதாகவும் வடக்கு பஞ்ச்ஷிர் கூட்டணி படையின் செய்தி தொடர்பாளர் கூறி இருக்கிறார். அங்கு தொடர்ந்து கடுமையான சண்டை நடந்து வருகிறது.