தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் தரவுத்தளத்திலிருந்து காணாமல்போயுள்ள சுமார் 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட கோப்புகள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதில், உள்நாட்டு மருந்து விநியோக முகவர்களின் விபரம், மருந்து வகைகளின் பதிவுகள் என்பன தொடர்பான ஆவணங்கள் அடங்கிய கோப்புகளும் உள்ளடங்குவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.