தீ விபத்துக்கு உள்ளான ´எக்ஸ்பிரஸ் பேர்ல்´ கப்பல் மூழ்கும் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (1) தொடக்கம் கப்பலில் நீர் கசிவு ஏற்பட்டுள்ள காரணத்தால் கப்பல் இதுவரையில் 50 சதவீதம் கடலில் மூழ்கியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்திற்கு அண்மித்த கடலில் தீ விபத்துக்கு உள்ளான ´எக்ஸ்பிரஸ் பேர்ல்´ கப்பலை ஆழ் கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் (01) குறித்த அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்.

அதன்படி, குறித்த மீட்பு நிறுவனத்திற்கு வசதிகளை செய்துக் கொடுக்க கடற்படையின் விசேட குழு ஒன்று இன்று (02) முற்பகல் கப்பலில் ஏறியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

மீட்பு நிறுவனத்தின் டக் இயந்திரம் ஊடாக கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.