கன்னட திரையுலகில் அறிமுகமாகி தெலுங்குத் திரையுலகில் முன்னணிக் கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா வந்தனா. தற்போது கார்த்தி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘சுல்தான்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார்.

தெலுங்குப் படங்களில் நடித்துகொண்டிருக்கும்போதே அவருக்கு பாலிவுட்டிலும் நடிக்கும் வாய்ப்பு வந்துவிட்டது. அங்கே அவர்,‘மிஷன் மஞ்சு’ என்ற இந்திப் படத்தில் சித்தார்த் மல்ஹோத்ராவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஷாந்தனு பாஹி இயக்கும் இப்படத்தின் முதல் தோற்றம்வெளியாகி வரவேற்ப்பை பெற்றிருந்தநிலையில் பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சனுடன் ‘குட் பை’ என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ராஷ்மிகா. இத்திரைப்படத்தின் பூஜை இன்று மும்மையில் நடந்ததுள்ளது. அதை தனது சமூக வலைதளப் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருக்கிறார்.