ITN தொலைக்காட்சியில் ஆரம்ப காலத்தில் முதன் முதலில் தமிழிலில் ஔிபரப்பாகிய பிரபல்ய நிகழ்ச்சிகளான முத்துச்சரம்,ரசிகர் அரங்கம் மற்றும் அபூ நானா தொடர் நாடகத்தின் தயாரிப்பாளரும் இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் முன்னாள் அதிதி தயாரிப்பாளரும் ,வர்ணம் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகிய கன்ஸுல் இஸ்லாம் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் லியாவுல் பன்னான் கலைச்சுடர் அல்ஹாஜ் எம்.பி.எம்.ஹுஸைன் பாரூக் அவர்கள் வபாத்தானார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா வெல்லம்பிட்டி மெகட கொலன்னாவ இலக்கம் 161/17 எனும் முகவரி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இன்று அஸர் தொழுகையின் பின்னர் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற பிரார்த்திப்போம்.