தமிழில் ஒருநாள் கூத்து படம் மூலம் மிகவும் பிரபலமான நிவேதா பெத்துராஜ்இ கவர்ச்சியான கதாபாத்திரங்களை விரும்புவதாக கூறியிருக்கிறார்.

ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இதைத் தொடர்ந்து டிக் டிக் டிக்இ திமிரு பிடிச்சவன்இ சங்கத் தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். பிரபுதேவாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள பொன் மாணிக்கவேல் திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இவர் தமிழ்இ தெலுங்கு என இருமொழிகளில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தள பக்கத்திலும் தீவிரமாக இயங்கி வருகிறார். நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில்இ ‘தொடர்ந்து சீரியசான கதாபாத்திரங்களில் நடிப்பது சோர்வடைய வைக்கிறது.

சீரியசான கதாபாத்திரங்களைத் தவிர தன்னுடைய குறும்புத்தனம் மற்றும் கவர்ச்சி பக்கத்தையும் காண்பிக்குமாறு உள்ள கதாபாத்திரங்களை செய்ய விரும்புகிறேன். ஏதாவது சில இயக்குனர்கள் கவர்ச்சியான கதாபாத்திரத்துடன் வருவார் என்று நம்புகிறேன்’ என தெரிவித்துள்ளார்.