தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாசிமின் அடிப்படைவாத கொள்கை பிரசாரங்களை வட்சப் குழுமத்தின் ஊடாக பகிர்ந்தமை மற்றும் அடிப்படைவாதத்தை பரப்பியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த இவர்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.