குழப்பநிலை காரணமாக நேற்று தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காபூல் விமான நிலையம் மீள திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தின் பாதுகாப்பிற்காக, பாதுகாப்பு தரப்பினர் அங்கு நிலை கொண்டுள்ளதுடன் மேலும் ஒரு தொகுதியினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் அமெரிக்க தரப்பினர் தெரிவித்துள்ளனர்.