பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் கூட்டு உடன்படிக்கையை ரத்து செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உயர் அதிகாரியொருவர், இதனை உறுதிப்படுத்தினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையினால், சம்பளம் நிர்ணயிக்கப்பட்டமையினாலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை கிடைத்த சலுகைகள் அனைத்தும், இந்த வர்த்தமானி வெளியானதன் பின்னர் ரத்தாகும் சாத்தியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.